உலக அளவில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடந்து வரும் நிலையில், அதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த வகையில் ChatGPT மீதான பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதை மெட்டா கண்டறிந்து உள்ளது. இந்த மோசடிகள் ChatGPT மீதான மக்களின் ஆர்வத்தை மற்றும் நம்பிக்கையை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் கிரிப்டோகரன்சி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக Meta 10-க்கும் அதிகமான போலி ChatGPT செயலிகளை கண்டறிந்து உள்ளது. அதுமட்டுமின்றி அந்த செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது. இதுபற்றி வெளியிட்ட விளக்கத்தில் இந்த ஆபத்தான விஷயங்களை செய்யும் மோசடி கும்பல் மக்களை ஏமாற்ற LinkedIn, Chrome, Edge, Brave மற்றும் Firefox ஆகிய பிற இணையதளங்களையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மெட்டா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.