இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீப காலமாக வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி ஹேக்கர்ஸ் மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில், +60(Malaysia), +254(Kenya), +84(Vietnam), +62 (Indonesia), +223 (Mali) போன்ற நாடுகளின் ISD குறியீடுகளுடன் நமது வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைப்புகள் வருகின்றன. நம்மை மோசடியில் சிக்க வைக்கவே அழைக்கின்றனர். அதனால், மேற்கூறிய ISD எண்களில் இருந்து அழைப்பு வந்தால், அதனை ஏற்க வேண்டாம். அதோடு, அந்த எண்ணை Block செய்துவிடவும்.