மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட அரை மணி நேரத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென பயங்கரமாக அலறி கத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அந்தப் பெண் பயணியிடம் கேட்டபோது காலில் ஏதோ ஒன்று தன்னை கடித்து விட்டதாக கூறியுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கால் வீங்கி இருந்தது. உடனே விமானத்தின் சீட்டு கடியில் சிலர் குனிந்து பார்த்த போது அங்கு விஷத்தேள் இருப்பது தெரிய வந்தது. அந்த பயணி விஷயத்தேள் கடித்ததால் மயக்கமடைந்தார்.

அவருக்கு விமான ஊழியர்கள் முதலுதவி அளித்தனர். விமானம் மும்பையில் தரையிறங்கியதும் உடனடியாக அந்தப் பெண் பயணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு. இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். விமானத்தை சுத்தம் செய்யும்போது தேள் அகற்றப்பட்டது. இனி இது போன்ற சம்பவம் நிகழாது என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பாம்பு ஒன்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.