இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது, குறைவான வருமானம் காட்டி வரி செலுத்துதல் மற்றும் தவறான முறையில் வருமான வரி தொடர்பாக புகார் கொடுத்தல் போன்ற குற்றசாட்டுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமானத்தை விட குறைந்த அளவு வருமானத்தை காட்டி வரி செலுத்தினால் அது பிரச்சினையை ஏற்படுத்தும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் வருமானவரித்துறையினரால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று வருமானம் குறித்து தவறான முறையில் புகார் கொடுத்தாலும் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இவர்களுக்கு குறைந்த வருமானத்தில் செலுத்த வேண்டிய வரியில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அதன் பிறகு குறைந்த அளவு வருமானத்தை காண்பித்து வரி செலுத்தினால், வரி செலுத்துவோர் அத்தகைய தவறான வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரியில் 200 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டி வரும். மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.