ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது போல, தாமரை பட்டனை அழுத்துகிறார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.