இன்றைய காலகட்டத்தில் ஒரு அவசர தேவைக்கு வெளியே செல்லும்போது பைக் என்பது ஒரு அத்தியாவசியமான வாகனமாக மாறிவிட்டது. இந்தியாவில் புதிய பைக் விலை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது போன்றே தற்போது பழைய பைக்குகளில் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. பழைய பைக்குகளை விற்பனை செய்யும் சில செயலிகளும் இருக்கிறது. இந்நிலையில் Bike Dekho என்ற செயலியில் விற்பனை செய்யப்படும் பழைய பைக்குகள் குறித்து தற்போது சில தகவல்களை பார்க்கலாம். அதன்படி இந்த செயலியில் பஜாஜ் பல்சர் 150 எஸ்டிடி (2007 மாடல்) பைக் இருக்கிறது.

இந்த பைக் 53 ஆயிரம் கிலோமீட்டர் ஓடி உள்ளது. இதன் விலை 12 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன் பிறகு ஹோண்டா சிபி ஷைன் (2011 மாடல்) பைக் இதுவரை 72000 கிலோமீட்டர் ஓடி உள்ளது. இந்த பைக்கின் விலையும் 12 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனையடுத்து ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் (2018 மாடல்) பைக்கின் விலை 15 ஆயிரம் ரூபாயாகவும், பஜாஜ் சிடி100 ஈஎஸ் அலாய் (2016 மாடல்) பைக்கின் விலை 16 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் நீங்கள் பைக்குகளை வாங்குவதற்கு முன்பாக பைக்கை நன்றாக ஓட்டி பார்ப்பதோடு, டீல் சரியாக இருக்கிறதா மற்றும் பைக்கின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.