நிகழாண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கோடைக்கால விற்பனையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனுக்கு ரூ.12,000 வரையிலும் தள்ளுபடி வழங்குகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த வருடம் இந்தியாவில் ரூ.66,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் வாயிலாக இயக்கப்படுகிறது. இது 12GP வரை ரேம் மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளிட்டவற்றை கொண்டு உள்ளது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5G ஸ்மார்ட் போன் Amazon.In மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.11,000 குறைந்து ரூ.55,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. OnePlus.in இணையதளப்பக்கத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கோடக் மஹிந்திரா வங்கியின் கிரெடிட்கார்டு பயன்படுத்தி ஒன்பிளஸ் 10 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.750 தள்ளுபடி செய்யப்படுகிறது. எனினும் இந்த தள்ளுபடி சலுகை மே 8 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.