விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தகம் பூண்டி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி திடீரென தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜீவ் காந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.