சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு நபர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அங்கு இரண்டு பெண்கள் அந்த வழியாக செல்கின்றனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக கண்ணாடி உடைந்து கார் ஒன்று சூப்பர் மார்க்கெட் உள்ளே தலைகீழாக கவிழ்ந்து விழுகிறது.

இதில் சுற்றி இருந்த நான்கு நபர்களும் பயத்தில் பதறி அடித்து ஓடி வருகின்றனர். இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஓட்டுனரின் கவன குறைவின் காரணமாக கார் விழுந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.  “யூ ஆர் நாட் சேஃப் எனிவர்”என்ற வாசகத்தோடு இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.