“கரிபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தனியார் ஜெட் விமான விபத்து ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அங்கிருந்து புறப்பட்ட ‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200’ ரகத்தை சேர்ந்த அந்த சொகுசு ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரத் தரையிறக்கம் (Emergency Landing) செய்ய முயன்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

ஓடுபாதையைத் தொட்ட அடுத்த வினாடியே அந்த விமானம் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பந்தமாய் மாறியது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

“>

 

அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்பதை டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. பார்ப்போரைக் பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”