வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலவி வரும் கடுமையான பஞ்சம், வேலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற வறுமைச் சூழல்களால் பெருமளவிலான இளைஞர்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பியோடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிரைப் பபயணயம் வைத்து நடுகடலில் நீந்தியபடியே அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டு எல்லையை நோக்கிப் படையெடுத்து வரும் திடுக்கிடும் காட்சிகள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன,

குறிப்பாக, கடந்த ஒரு வார இடைவெளியில் மட்டும் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடல் மார்க்கமாகப் பயணம் செய்து ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியான கியூட்டா (Ceuta) நகரை அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சொந்த நாட்டின் பொருளாதாரச் சுமையிலிருந்து மீள முடியாமல் இதுபோன்று ஆயிரக்கணக்கில் மக்கள் தஞ்சம் புகுந்து வருவதால் அப்பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் அனைத்தும் தற்போது முற்றிலும் நிரம்பி வழிந்து வருவதாகக் காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழல் அப்பகுதியில் தொடர் மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு, எல்லோரையும் ஷாக் ஆக்கும் வகையில் இளைஞர்கள் ஆபத்தான கடல் வழியைக் தேர்ந்தெடுத்துத் தப்பியோடும் விதம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, தொடர்ந்து அதிகரித்து வரும் புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.