‘கலாட்டா டைட்டன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ (Galatta Titans Of Tamilnadu) என்ற பிரம்மாண்ட விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு மனிதவளத்துறை அமைச்சர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது, மரபணு குறைபாடு (Genetic Problem) காரணமாகப் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வரும் மாஸ்டர் தேவான்ஷ் என்ற சிறுவனுக்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேடைக்கு வந்த அச்சிறுவனை, அமைச்சர் சரத்குமார் அவர்கள் மிகுந்த அன்போடு நெகிழ்ச்சியுடன் தூக்கி வைத்துக் கொண்டு அவனுக்கான விருதை வழங்கினார்.
Genetic பிரச்சனையில் சிகிச்சை பெற்று வந்த
என் மகனை மற்றவர்கள் ஒதுக்குவார்கள் நீங்கள் தூக்கி வைத்துக் கொண்டது சந்தோஷமாக இருக்கிறது
அமைச்சர் சரத்குமார் செயலால் நெகிழ்ச்சி அடைந்த தாய் !
Galatta Titans Of Tamilnadu
Award விழாவில் Master Devansh அவர்களுக்கு இவ் விருதை மாண்புமிகு… pic.twitter.com/mTEMzyKBwk— Sarathkumar (@sarath0828) June 7, 2026
அமைச்சரின் இந்த மனிதநேயமிக்க செயலைக் கண்டு அச்சிறுவனின் தாய் மேடையிலேயே மிகவும் நெகிழ்ச்சி அடைந்து தனது நன்றியையும், கண்ணீர் மல்கக் குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார். மரபணு குறைபாடு உள்ள தனது மகனைப் பிறர் ஒதுக்கி வைத்த நிலையில், ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும் ஒரு மாபெரும் மேடையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது மகனைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது தனக்குப் பெரும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாக அவர் உருக்கமாகக் கூறினார். அமைச்சர் சரத்குமார் அவர்களின் இந்த அன்பான செயலும், தாயின் நெகிழ்ச்சியான நெஞ்சார்ந்த வார்த்தைகளும் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி நெட்டிசன்களின் மனதை உருகச் செய்து வருகிறது.
