தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் இந்தியாவின் 50ஆவது தலைமை நீதிபதி ஆவார்.அவர் மே 2016 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 9 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2024 க்கு இடையில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். தற்போது சந்திர சூட் 65 வயதை அடைவதால் நவம்பர் 10 முதல் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இவரது தந்தையும் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவராவார். சந்திரசூட் பணியாற்றிய காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒப்பீட்டு அரசியலமைப்புச் சட்டம், மனித உரிமைகள், பாலின நீதி, பொதுநல வழக்குகள் , வணிகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் அவர் நடுநிலைமையான தீர்ப்புகளை வழங்கியிருந்தார்.

மேலும் இவர் 2022 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்கு எதிராக ராமர் கோவில் கட்ட வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இவரது தீர்ப்புகள் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இதில் முக்கியமானது பாஜக அரசு கொண்டு வந்த பத்திர நடைமுறை சட்டத்துக்கு எதிரானது என தீர்ப்பளித்தது மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் துணை ஆளுநர் தேர்ந்தெடுத்ததை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் அதிகம் என தீர்ப்பளித்தது கவனத்தை  ஏற்படுத்தியது.

மேலும் பொது நலனுக்காக சொத்துக்களாக இருந்தாலும் தனிநபர் சொத்துக்களை அரசு கையாகப்படுத்துவது விதிமீறல் இதனை செயல்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என இம்மாத முடிவில் அளித்த தீர்ப்பாகும்.  தற்போது நடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது சந்திர சூட்டின் வீட்டிற்கு பிரதமர் வருகை தந்தது மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. கடவுள் காட்டிய வழியிலேயே ராமர் கோவில் கட்டப்பட்டது என தலைமை நீதிபதி கூறியது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.