இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் டெல்லியின் பிரதான ஆறான யமுனை நதியில் ரசாயனம் கலந்து நதி முழுவதும் நச்சு ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கட்சியினர் மத்திய அரசு யமுனையை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கியும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து கடுமையான கண்டனங்களை கூறி வருகிறது.
தற்போது ஆறு முழுவதும் நச்சு நுரையாக மாறி பனிப்பொழிவு போல் ஆற்றில் மிதந்து வரும் நச்சு கழிவுகளின் பாதிப்பு தெரியாத சில மக்கள் அதில் குளிக்கின்றனர். மேலும் சில பெண்கள் அந்த நச்சுனுறையை தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் நச்சு கழிவுகள் குறித்த பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.