ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகை ஒட்டி இளம் பெண் ஒருவர் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் கூறியதாவது, தசரா பண்டிகை நடைபெறும் வாரத்தில் தன்னுடைய பிறந்தநாள் வந்ததாகவும், அதனால் தனது ஆண் நண்பர் ஒருவருடன் புரைகாட் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தேன்.

அங்கு சென்றபோது அந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தனது ஆண் நண்பர் உட்பட ஒரு சிறுவனோடு சேர்த்து 6 பேர் சேர்ந்து தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர்கள் தன்னை தவறான முறையில் வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் பாதம்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.