உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மகளிர் ஆணைய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஆண் டெய்லர்கள் பெண்களுக்கு ஆடை அளவுகளை எடுக்கக் கூடாது, ஜிம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கும் போது ஆண்கள் பெண்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது.
முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு ஆண்கள் முடி திருத்தம் செய்தல் கூடாது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த முன்மொழிவுகள் அனைத்தும் சட்டமாக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளனர். பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது, தொடுவது போன்ற செயல்களில் இருந்து பாதுகாக்க இந்த முன்மொழிவுகள் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.