தமிழக பாஜக நடத்தி வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு திமுகவை பாருங்க 35 அமைச்சர்கள் திமுகவில் இருக்கிறார்கள். 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் இருக்கிறது. அதை இப்ப பாரதிய ஜனதா கட்சியோ,  அண்ணாமலையோ,  கருப்பு முருகானந்தம் அவர்களோ, பாஜக  மாவட்ட தலைவர் ஐயப்பனோ குற்றச்சாட்டு வைக்கல. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது திமுக அமைச்சர்கள் செய்த ஊழலுக்காக…

11 கேஸ் இன்னிக்கு வேறு வேறு கோர்ட்டுல வழக்கு நிலுவையில் இருக்கு…  11 அமைச்சர்கள்… நாங்கள் 5 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் கூட….  அங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் 16 பேருக்கு….  11 பேருக்கு மேல் ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டிலும்,

5  பேரின் மீது பாரதிய ஜனதா கட்சி வைக்கப்பட்ட ஊழல் பட்டியலும் எங்கேயும் பார்த்தது கிடையாது.  அப்படிப்பட்ட ஊழல் மிகுந்த ஒரு அரசியலை….  அரசாங்கத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நடத்தி விட்டு,   யாராவது கேட்டீங்கன்னா… ஒரே வார்த்தை தான் சொல்லுவாரு… அண்ணே 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்கள்….  511 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா என்று கேட்டால் என்ன சொல்லுவாரு ? 99 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லுவாரு என தெரிவித்தார்.