தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, செல்வ ராகவன், வரலட்சுமி, அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் பாடலை நேற்று பட குழு வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் எனவும் பட குழு அறிவித்துள்ளனர்.