பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் கடந்த 2010 வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில் 14 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய 14 வருடத் திரை அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நான் தற்போது என்னுடைய 35-வது திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை என் வாழ்க்கையில் நான் எந்த படத்திலும் முத்தக் காட்சியில் நடிக்கவில்லை. நான் ஒரு படத்தின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டால் தொடக்கத்திலேயே இயக்குனரிடம் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை கூறிவிடுவேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டு என்னை தேர்ந்தெடுத்தாலும் சரி எனக்கு பதில் வேறு நடிகையை தேர்ந்தெடுத்தாலும் சரி அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மேலும் எதற்கும் நான் தயாராகவே இருப்பேன் என்று கூறியுள்ளார்.