தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இவர் படங்களில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பாங்காக நடிப்பதால் ஏராளமான ரசிகர்கள் நடிகை சாய் பல்லவிக்கு இருக்கிறார்கள். அதோடு அவர் முகத்தில் மேக்கப் போடுவதையும் விரும்ப மாட்டார். பெரும்பாலும் நடிகை சாய் பல்லவி எங்கு சென்றாலும் மேக்கப் போடாமல் தான் செல்வார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று நடிகை சாய் பல்லவியிடம் விளம்பர படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளனர். அவர்கள் அதற்கு ரூ‌.2 கோடி வரை சம்பளம் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி எத்தனை கோடி கொடுத்தாலும் நான் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். மேலும் அழகு சாதன பொருட்களில் உள்ள தீமையை உணர்ந்து தான் அந்த விளம்பரத்தில் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.