தமிழக சட்டப்பேரவை விவாதத்தின்போது “தந்தையைக் காணோம்” என முதலமைச்சர் பேசியதும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த எதிர்வினையும் சற்றும் ஏற்புடையது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் சி.பி.ஐ. வீரபாண்டியன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகள் என்பது அரசியலில் யாருக்கும் நிரந்தரமற்றவை என்றும், அதன் காரணமாகத் தேர்தலில் தோற்றவர்களைக் கீழாகப் பார்க்கும் ஆளுங்கட்சியினரின் மனநிலை முற்றிலும் தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த அடையாளமாக விளங்கும் சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைப் பொறுப்புணர்வுடன் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
