“நான் சும்மா இருந்தா வாயில கொழுக்கட்டை வச்சிருக்காரான்னு கிண்டல் பண்றாங்க , ஆனா நாம என்னதான் நல்ல விஷயம் செஞ்சாலும் நம்மளப் பிடிக்காதவங்களுக்கு அது பிடிக்கவே பிடிக்காதுப்பா; நம்மளப் பிடிச்சவங்களுக்கு நாம என்ன பண்ணாலும் பிடிக்கும்னு நினைக்கிறது மாபெரும் முட்டாள்தனம் , ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்!”

என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மனதில் உள்ள  பாரத்தை உடைத்து, மிகுந்த தயக்கத்துடனும் ஆதங்கத்துடனும் பேசியிருப்பது தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தையும் தாண்டி இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த், ‘தர்மன்’ பட டைட்டில் வெளியீட்டு விழாவில்  கலந்துகொண்டு பேசிய அவர், “இப்பல்லாம் மேடையில் பேசுறதுக்கே எனக்கு ரொம்பப் பயமா இருக்கு சார்; ஏன்னா நான் பேசினாலே ஒன்னு எனக்குப் பிராப்ளம், இல்லன்னா மத்தவங்களுக்குப் பிராப்ளம்னு எதையாவது ஒன்னைக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க” என்று மேடையிலேயே தனது ஆழ்ந்த எமோஷனை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து மிகவும் அலர்ட்டாக மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டிய ரஜினி, பிடிக்காதவர்கள் எப்போதும் தவற்றைக் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டிருப்பதால் இனிமேல் பொதுவெளியில் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் போவதாகக் கூறி, ரசிகர்களுக்கு ஒரு  ரகசிய அட்வைஸையும் வழங்கியுள்ளார்..