ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன் ஞானப்பிரகாசம் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென பறந்து வந்த மலை தேனீக்கள் பொன்னம்மாளையும், அவரது மகனையும் துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் காயமடைந்த 2 பேரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பொன்னம்மாளையும், ஞான பிரகாசத்தையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.