திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி விட்டனர். இதனால் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணை வைத்து பணம் வைத்து சூதாடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.