பிரபல சினிமா பின்னணி பாடகர்களில் ஒருவரான மனோ கடந்த 1992ல் ரிலீஸ் ஆன சிங்காரவேலன் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்திருக்கும் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் மனோ.

இதுகுறித்து மனோ கூறியதாவது “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் விக்னேஷ் ஷா, தயாரிப்பாளர் கே.குமார் மற்றும் சிவா போன்றோருக்கு நன்றி. சிங்காரவேலன் படத்தில் நடித்த பின் இளையராஜா என்னை அழைத்து, மீண்டும் நடிக்க சென்றால் உனக்காக பாட்டு காத்துக்கொண்டு இருக்காது என்று கூறினார். இதனால் நடிப்பின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் இதுவரை 26 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளேன்”என்று அவர் கூறியுள்ளார்.