ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். அதோடு நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றார் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்மையில் இப்படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாக பரவியது. இத்திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கும் தோற்றத்தினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.