அமீர் டைரக்டில் கடந்த 2007ம் வருடம் ரிலீஸ் ஆகிய பருத்திவீரன் படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி இப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

இப்போது கார்த்தி “ஜப்பான்” படத்தில் நடித்து வருகிறார். கடந்த 16 ஆண்டுகளில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார் கார்த்தி. இதனிடையே தன் 16-வது வருடத்தை கொண்டாடி வரும் கார்த்திக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.