வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் பிரசாந்த். இவர் 90s-கள் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். நீண்ட இடைவேளைக்கு பின் இவர் நடித்திருக்கும் திரைப்படம் “அந்தகன்”. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய அந்தாதூன் படத்தை தமிழில் அந்தகன் எனும் பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இந்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க, சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி உட்பட பெரும்பானோர் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் டைரக்டு செய்கிறார். இந்த நிலையில் அந்தகன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடலை அறிவித்தபடி நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த பாடலானது தற்போது வைரலாக பரவி வருகிறது.