ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதே போல இந்தியாவில் இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஐந்து திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படம் 1970 கோடிகளை குவித்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் 1800 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டியது. அதை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகம் 1230 கோடியும் RRR 1206 கோடியும் தற்போது வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடியும் பெற்று வசூல் வேட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.