நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பார்ஸி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் இந்த சீரிஸின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர், எப்போதுமே சுவையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புகிறேன். சுவையான சாப்பாட்டை சாப்பிடாவிட்டால், ஒருவரது வாழ்க்கையில் சுவை இருக்காது. குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இல்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட வேண்டும் என்றார்.

இவருடைய இந்த பதில் அவருடைய ரசிகர்களை குறிப்பாக உணவு பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று இல்லாமல் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட வேண்டும் என்று கூறிய விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்