வீட்டின் ஜன்னல் திரைகள் தானாகவே அசைந்ததால் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கருதி அச்சத்தில் உறைந்திருந்த ஒரு குடும்பத்தினருக்குப் பின்னணியில் இருந்த உண்மை தெரியவந்ததும் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஜன்னல் திரைகள் மர்மமான முறையில் தானாகவே மூடுவதும் திறப்பதுமாக இருந்ததால், அங்கு ஏதோ தீய சக்தி இருப்பதாக அந்த வீட்டார் நம்பினர்.
एक परिवार बहुत डरा रहता था क्योंकि रात में या दिन में अक्सर कोई उनके पर्दा खोल देता था या बंद कर देता था
परिवार वालों को लगता था कि घर में कोई भूत है फिर एक व्यक्ति को बुलाया गया उन्होंने मोबाइल चालू करके रखा फिर पता चल गया कि कौन पर्दा खोलता था और बंद करता था
😂😂😂😂 pic.twitter.com/ZUjNnWGDEy
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) February 8, 2026
இந்த மர்மத்தை உடைக்க ஒரு நபரின் உதவியை நாடிய நிலையில், அவர் அறையில் அலைபேசி கேமராவைப் பொருத்தி ரகசியமாகக் கண்காணித்தார். அந்தப் பதிவுகளை ஆய்வு செய்தபோது ஜன்னல் திரைகளை அசைத்தது பேய் அல்ல, ஒரு சிறிய எலி என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த எலி ஜன்னல் திரையைக் கடிக்காமல் மிகவும் சாதுர்யமாகத் தனது பலத்தால் முன்னும் பின்னும் இழுத்து விளையாடி வந்துள்ளது.
எலியின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயலால் ஏற்பட்ட பயம் நீங்கிய நிலையில், இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. பேய் என்று பயந்த விஷயம் வெறும் எலியின் சேட்டை என்று தெரிந்ததும் அந்தப் பகுதியினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
