உத்தரப் பிரதேச மாநிலம் அஹிபரன்புரா கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது காதலரின்  திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் தகவல்கள் இதோ:

 புஷ்பா தேவியின் கணவர் ஷேர் சிங் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வந்த நிலையில், புஷ்பாவுக்கும் அவரது கணவரின் தம்பிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது. இது கணவருக்குத் தெரியவரவே, தம்பியை வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில், கணவரின் தம்பிக்கு  வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி  திருமணம் நடக்கவிருந்த நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த புஷ்பா பலமுறை முயற்சி செய்துள்ளார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கணவரின் தம்பி  ஊருக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பா அவரிடம் நேரில் சென்று தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் தனது அறைக்குச் சென்ற புஷ்பா, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது 10 மற்றும் 7 வயதுக் குழந்தைகள் தாய் தொங்குவதைப் பார்த்து அலறியது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்தது.