பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கு வெளியே, செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் கருத்து கேட்க முயன்றபோது, அங்கிருந்த மாணவர்கள் அந்தப் பெண்ணை தள்ளிவிட்டும், கேமராவிற்கு முன்னால் கத்தியும் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
Yahi log bihar se gujrat ke loha factory me kaam karne jaate hai
Ye log isi layak hai pic.twitter.com/vxrmQS7mQ6— Nishant 🇮🇳 (@Nishantchant) February 7, 2026
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், “இவர்கள் எல்லாம் படித்துவிட்டு போலீசாகப் போகிறார்களா? இவர்களா பீகாரைக் காப்பாற்றப் போகிறார்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் செய்தியாளரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறி, அவருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கிய இந்த மாணவர்களின் செயலைக் கண்ட நெட்டிசன்கள், “படிப்பு மட்டும் போதாது, அடிப்படை ஒழுக்கமும் வேண்டும்” என்று விளாசி வருகின்றனர். இந்தச் சம்பவம் பீகாரில் பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
