செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் இன்று காலை வழக்கம்போல உணவகத்தில் இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணிடம் இட்லி வாங்கிச் சாப்பிட்டபோது, பரிமாறப்பட்ட சட்னியில் பல்லியின் வால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதற்குள் 9 பேர் அந்த உணவைச் சாப்பிட்டிருந்த நிலையில், அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது 9 பேரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.