கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜகுமாரி தனது கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.