கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று தமிழரசன் பெண்ணாடம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.