நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் மணிகண்டன் சடலமாக மிதந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டனர். அவரது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்து மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது.