“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார்.
மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு நேருக்கு நேராகப் பதிலடி கொடுத்துள்ள எம்.எல்.ஏ பல்லவி, ‘அடுத்தவங்களை தற்குறினு சொல்லிட்டு, இவங்கதான் இப்போ தற்குறித்தனமான வேலையை பண்ணிக்கிட்டு இருக்காங்க; ஒரு மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ-விற்கு ஒரு மேயர் கொடுக்கும் மரியாதை இதுதானா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு விதிமுறைப்படி மேயருக்கு அடுத்தபடியாக தொகுதி எம்.எல்.ஏ தான் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்பதுதான் முறை என்று குறிப்பிட்ட அவர், ‘அவங்க எங்க படிச்ச புரோட்டோகால்னு எனக்குத் தெரியல’ என மேயரின் செயலை நிதானமாக விமரிசித்துப் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
‘முறைப்படி எனக்குத் தர வேண்டிய மெழுகுவர்த்தியைத் தராமல் ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தியதே மேயர் தரப்புதான்’ என பல்லவி ஓப்பனாக உடைத்துப் பேசியிருப்பது சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.”
இருக்கிறவர்களை தற்குறினு சொல்லிட்டு இவங்க தான் தற்குறி வேலை பண்றாங்க.. ஒரு MLA-விற்கு மேயர் கொடுக்கும் மரியாதை இது தானா..? குத்துவிளக்கை மேயருக்கு அப்புறம் MLA தான் ஏற்றணும் .. அவங்க படிச்ச protocol எப்படி-னு தெரியல.. தவெக MLA பல்லவி பிரத்யேக பேட்டி#MayorPriya #TVKMla… pic.twitter.com/jCUWOHnnk6
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 4, 2026
“>
