தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய புதிய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி அவர்கள், ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக விமரித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, புதிய அரசு பொறுப்பேற்று இத்தனை நாட்கள் ஆகியும் உருப்படியாக எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய ஆட்சியில் இருந்த திட்டங்களின் ஸ்டிக்கரை மட்டும் மாற்றி ஒட்டி, ‘சிங்கப்பெண்’ என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, அதையும் செய்ய முடியாமல் தவித்து வருவதாகச் சாடியுள்ளார்.

எதற்கும் உதவாத ஒரு ‘சோஃபா மாடல்’ ஆட்சிதான் இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் மேடையில் வெளிப்படையாக விமர்சித்துப் பேசியுள்ளது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களுக்கு இடையே புதிய அரசியல் யுத்தத்தைத் தொடக்கி வைத்துள்ளது.