நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் படித்துவிட்டு, ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளம் பெற்று வரும் 34 வயது இளைஞர் ஒருவர், திருமண இணையதளத்தில் வந்த பெரும்பாலான வரன்களை நிராகரித்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் பெண்களைத் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்று அவர் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
பெண்ணின் சம்பளமும் தனது சம்பளத்திற்கு இணையாக இருந்தால் மட்டுமே வீட்டு வேலைகளையும் குழந்தை பராமரிப்பையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும், அல்லது வேலைக்குச் செல்லாமல் முழுநேரமாகக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் அவர் வாதாடியுள்ளார். இவ்வளவு குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு அவர்களால் குடும்பத்தின் நிதிக்குக் கணிசமாகப் பங்களிக்க முடியாது என்றும், அதே சமயம் அவர்களின் வேலை நேரம் காரணமாகக் குழந்தைகளைச் சரியாக வளர்க்க நேரம் ஒதுக்க முடியாது என்றும் அவர் தனது முடிவில் உறுதியாகக் கூறியுள்ளார்.
<a href=”http://
I have a friend in India who earns 1.6 cr per annum. He is 34 years old and works in one of the Big 4 consulting firms.
Recently, he made his profile on https://t.co/Txcv5mP8Lp and was flooded with messages within a week.
But, most of the women who pinged him have very low…
— Kabir Menon (@the_psyche_lab) June 11, 2026
“>
இந்தச் சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கபீர் மேனன் என்ற பயனர், ஒரு மில்லியன் ரூபாய் சம்பாதிக்கும் பெண், ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவது தவறாகப் பார்க்கப்படாத போது, ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆண், குறைந்த சம்பளம் வாங்கும் பெண்ணை மறுப்பது ஏன் தவறாகப் பார்க்கப்படுகிறது என்று சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
தற்போதைய பணவீக்கம் மற்றும் குழந்தை வளர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த இளைஞரின் நடைமுறைக் கண்ணோட்டம் முற்றிலும் சரியானது என்று ஒரு தரப்பினரும், திருமணம் என்பது ஒரு வணிக ஒப்பந்தம் அல்ல என்றும், குறைந்த சம்பளம் வாங்கும் பெண்கள் காலப்போக்கில் தங்களின் தொழிலில் முன்னேற முடியும் என்பதால் தற்போதைய சம்பளத்தை மட்டும் வைத்து நிராகரிப்பது குறுகிய மனப்பான்மை என்றும் மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
