டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் உடைந்த மொழியில் பேசாமல், அச்சு அசல் மிகச் சரளமாக ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி அசத்தும் ரிக்ஷா ஓட்டுநர் முகமது அஸ்லாமின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, வைரலாகி வருகிறது.பழைய டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்லாம், இணையத்தில் ‘அஸ்லாம் ரிக்ஷாவாலா’ (@aslam_rickshawala) என்ற பெயரில் மிகவும் பிரபலம்.
கடந்த 17 ஆண்டுகளாகப் பழைய டெல்லியின் தெருக்களில் ரிக்ஷா ஓட்டி வரும் இவர், வெறும் ஓட்டுநராக மட்டுமில்லாமல் அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். டெல்லியின் வரலாற்றுக் கதைகளைக் கூறுவதுடன், அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறார். இன்ஸ்டாகிராமில் 92,000-க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள அஸ்லாம் பாயின் புதிய வீடியோ ஒன்று தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
<a href=”http://
View this post on Instagram
“>
அந்த வீடியோவில் அஸ்லாம், கேமராவைப் பார்த்து மிகவும் கூலாக, “நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்? நான் அஸ்லாம் ரிக்ஷாவாலா. இன்று என் வாடிக்கையாளர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று கூறிவிட்டு, உடனடியாக அவர்களுடன் மிகச் சரளமாக ஸ்பானிஷ் மொழியில் பேசத் தொடங்குகிறார். அவர் ஸ்பானிஷில் கேட்க, அதற்கு அந்த வெளிநாட்டுப் பயணி புன்னகைத்துக்கொண்டே இந்தியில் “மிகவும் நன்றாக, மிகவும் நன்றாக” என்று பதிலளிப்பது பார்ப்போரைக் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், அஸ்லாமின் அசாத்திய தன்னம்பிக்கையையும் அவரது அரிய மொழித் திறமையையும் பாராட்டி வருகின்றனர். “அஸ்லாம் பாய் போன்றவர்கள்தான் தங்களின் இனிமையான உபசரிப்பால் சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை உயர்த்துகிறார்கள்” என்றும், இவரே இந்தியாவின் ‘அதிதி தேவோ பவ’ விருந்தினரே தெய்வம் என்ற உன்னத பாரம்பரியத்தின் உண்மையான முகம் என்றும் நெகிழ்ச்சியோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
