ஹரியானா மாநிலத்தில் உள்ள தௌரு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்கள் மீதும், பின்னர் டைல்ஸ் ஷோரூம் மீதும் பயங்கரமாக மோதிய விபத்தில் 34 வயது மதிக்கத்தக்க கபில் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தான் கட்டிவரும் புதிய வீட்டிற்காகத் தேவையான டைல்ஸ்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்காகக் கபில் அந்த ஷோரூமுக்கு வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பாதசாரி மீது அடுத்தடுத்து மோதிவிட்டு, நிலை தடுமாறி டைல்ஸ் ஷோரூமுக்குள் புகுந்து நொருங்கியது.

இந்த கோர விபத்தில் கபில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“>

 

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.