டெல்லியை சேர்ந்த ஒரு பெண், தனது வழக்கமான பயணத்தை முடித்துக்கொண்டு வாடகை வாகனத்தில் இருந்து இறங்கி, வீட்டிற்கு வெறும் ஒரு நிமிட தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணின் பின்புறமாக அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான மற்றும் ஆபத்தான சம்பவத்தால் தான் மிகுந்த பயமும் மன உளைச்சலும் அடைந்துள்ளதாக அந்தப் பெண் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பகிர்ந்துள்ளார். பெண்கள் யாரும் தங்களது வீட்டிற்குச் செல்லும் போது கூட பாதுகாப்பற்ற சூழலை உணரக் கூடாது என்றும், மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த வீடியோவை வெளியிடுவதாக அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து இணையவாசிகள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வீடியோவில் அப் பெண் தான் அணிந்திருந்த ஆடையைக் காட்டி நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், பெண்களின் ஆடைகள் ஒருபோதும் இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் அல்ல என்றும், தவறு செய்யும் ஆண்களின் புத்திதான் காரணம் என்றும் கொந்தளித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் 99 சதவீத பெண்கள் இத்தகைய மோசமான மற்றும் அச்சுறுத்தும் சம்பவங்களை தங்களது வாழ்வில் கடந்து வந்துள்ளதாகப் பல பெண் பயனர்கள் தங்களது வேதனையைப் பகிர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என்றும், அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் குற்றவாளிகளை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் பொதுமக்கள் பலரும் அந்தப் பெண்ணிற்குத் தங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.
