மும்பை பைகுல்லா ரயில் நிலைய வளாகத்தில், முதியவர் ஒருவர் வாலிபர் ஒருவரால் பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பைகுல்லா ரயில் நிலைய நடைமேடையில் முதியவர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு வாலிபர், தூங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரை எழுப்பி, தான் கையில் வைத்திருந்த பெல்ட்டை சுழற்றி அவரை நோக்கி சரமாரியாக வீசித் தாக்க முற்படுகிறார்.
எதிர்பாராத இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்த முதியவர், கையில் வைத்திருந்த ஊன்றுகோலின் உதவியுடன் எழுந்து நிற்கக் கூட முடியாமல் தட்டுத்தடுமாறி, தன்னைத் தற்காத்துக் கொள்ள அந்த வாலிபரை நோக்கி தடியைச் சுழற்றும் பதைபதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
लोगों की मानसिकता कितनी खराब हो चुकी है वह इस वीडियो में दर्शा रहा हूं।
जब एक बुज़ुर्ग इंसान पर बिना किसी वजह के हमला होता है, तो सिर्फ़ एक व्यक्ति नहीं बल्कि पूरी इंसानियत शर्मसार होती है। सम्मान, संवेदना और नागरिक जिम्मेदारी ही एक सभ्य समाज की पहचान हैं। हमें इन्हीं मूल्यों के… pic.twitter.com/d6NHuq5Jkm— A F KHAN (@kabirkhan488) June 8, 2026
இருப்பினும், அந்த வாலிபர் முதியவரின் உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக அவரை நோக்கி பெல்ட்டை வீசி அச்சுறுத்தி வருகிறார். முதற்கட்ட காட்சிகளின்படி, அந்த முதியவர் அங்கு யாசகம் பெற்று வாழும் ஆதரவற்றவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அந்த வாலிபர் எதற்காக அந்த முதியவரைத் தாக்கினார், அவர்களுக்குள் என்ன முன்விரோதம் என்ற விபரங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
பொதுவெளியில் வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வைரல் வீடியோ தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தாக்குதலில் ஈடுபட்ட அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர்.
