செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  உதயநிதி ஸ்டாலினை நான்ஒரு இந்து சகோதரராக  தான் பார்க்கிறேன்… அம்மா துர்கா ஸ்டாலின் ஹிந்து… அப்பா ஸ்டாலின் ஹிந்து… அப்பாவோட அப்பா கருணாநிதி ஒரு இந்து… அதனால் புதிதாக ஏன் ஒரு குழப்பத்தை கொண்டு வாறீங்க … முஸ்லிம் எல்லாமே ஒரே மதம்… ஒரே இறையை நோக்கி போகிறவர்கள் தான்…. ஒத்துமையாக இருக்க வேண்டும்,  அதுதான் நம்ம நோக்கம்..

இந்த பூச்சாண்டி ஆணையம், பூனையதுக்கு எல்லாம் பயப்படுகிறவன்  கிடையாது…  குஷ்பூ பிராட்டியார் யாரையும் உசுப்பேத்தாமல்….. இந்த மாதிரி மறுபடியும் பண்ணாமல்….  உட்கார்ந்து கொண்டு ரூம் போட்டு யோசிங்க… மன்சூர் அலிகான்உங்களையும் சேர்ந்து பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறேன். தமிழக அரசியலில் ஒரு புல்லை கூட இவுங்களால் புடுங்க முடியாது.. காங்கிரஸ் ஒரு புது விஷயம் சொல்லுகிறேன்….

40 இடம் 25 இடம் காங்கிரஸ் நின்று,  15 இடம் கூட்டணி கட்சிக்கு கொடுத்து நின்றாலும்….  தமிழ்நாட்டில் காங்கிரஸ் தான் வரும்….  நான் காங்கிரசுக்கு சப்போர்ட் பண்ணுறேன்…காங்கிரசுடன் புதிய பந்தம் ஒன்றும் கிடையாது.. அவர்களை நான்  முன்ன பின்ன பார்த்ததில்லை. பிரியங்கா காந்தி புது இரத்தம்… 34 வருடம் நேரடியாக பதவியில் இருந்தது இல்லை… இப்போது இந்தியாவை அதானி  நாடாக மாற்றிவிட்டாரா ? இல்லையா ? அன்றைக்கே ஆபத்தை சொன்னேன்…. அந்த ஆபத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.