இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மத்திய வெளியுறவு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவின் விருந்தோம்பல் குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய கெவின் பீட்டர்சன் பின்னர் இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் ட்விட் செய்துள்ளார்.