பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானது என்று டி ஜி பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் அந்த வீடியோக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில் சமூக வலைதளங்களில் இரண்டு போலி வீடியோக்கள் பரவி வருகின்றது என்றும் இந்த வீடியோக்களில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று காட்டப்பட்டுள்ளது போலியானது எனவும் கூறியுள்ளார்.

இரு வீடியோக்களும் உண்மையில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களை பிரித்து வெளியிட்டதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறி உள்ளார் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை இணையத்தில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.