மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, பழைய ஓய்வூதியம் பற்றி பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெற துவங்குவார்கள். அரசு சார்பாக ஒரு பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் டிசம்பர் 22, 2003-க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட (அ) அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மத்திய பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஒரு முறை பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான விருப்பம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்-22, 2003 முதல் தேசிய ஓய்வூதிய அமைப்பு(NPS) அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தகைய ஊழியர்கள் மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 1972 (இப்போது 2021) கீழ் பழைய ஓய்வூதியத்துக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்த விருப்பத்தின் வாயிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் இருக்கிறது. இந்த உத்தரவு 2004-ல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுத காவல்படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய பணியாளர்களுக்கு பொருந்தும். நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை அப்போது தாமதமானது என்பது கவனிக்கத்தக்கது.