மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, கட்சித் தொண்டர்களின் உண்மையான உணர்வு மற்றும் கட்சியின் கடந்த கால சோதனைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர், “கடந்த கால அரசியல் தோல்விகளைப் பற்றிப் பேசுவதற்கு இது நேரமில்லை, அதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்.
இப்போது நாம் தலைவர் கலைஞருடைய பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக இங்கே வந்திருக்கிறோம். திமுக என்றால் ‘திமுக உணர்வு’ நெஞ்சில் இருக்க வேண்டும்; அந்த உணர்வு இருந்தாலே இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது” என்று தொண்டர்களுக்கு எனர்ஜி ஊட்டினார். மேலும் தொண்டர்களைக் கடுமையாகச் சாடிய மூர்த்தி, “அதை விடுத்து, நான் திமுககாரன் என்று சொல்லிக்கொண்டு, தன் குடும்பத்தில் இருக்கும் பேரன், பேத்திகளை மட்டும் வைத்து ஓட்டுப் போடுவதால் நாம் தப்பித்துவிட முடியாது” என்று குடும்பப் பாச ஓட்டு அரசியலை வறுத்தெடுத்தார்.
இதைவிடப் பல்வேறு சோதனைகளை எல்லாம் சந்தித்துதான் நம் தலைவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்திருக்கிறார்கள் என்றும், இப்போது இருக்கும் நம் தலைவரும் அதைத்தான் செய்வார் என்றும் அவர் பேசிய வீடியோ தற்போது அல்காரிதம்களை அதிர வைத்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
