டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த கொடூர துயரம் மறைவதற்குள், நாட்டை உலுக்கும் வகையில் அடுத்த ஒரு கோர விபத்து பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ‘பிரசாத்’ என்ற தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வார்டு முழுவதும் அதிவேகமாகப் பரவியது.

​இந்தக் கோர விபத்தில், ஐசியூ பிரிவில் சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் தீயில் சிக்கி, உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தீயில் சிக்கி படுகாயமடைந்த 7 பேர் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தும், நோயாளிகளின் மரண ஓலமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.